கல்வி

தமிழக அரசு மாணவர்களின் படிப்பு சுமையைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகங்களின் பாடத்திட்டம் குறைக்கப்படுகிறது. இதில் 40% வரை பாடப்பகுதிகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் பாடப்புத்தகங்கள் முறையே 238, 236 மற்றும் 228 பக்கங்களைக் கொண்டுள்ளன. மாணவர்கள் முழுப் பாடத்திட்டத்தையும் முழுமையாகப் படிப்பதில் சிரமம் ஏற்படுவதால், இந்தப் பாடக்குறைப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாடநூல் கழகம் வெளியிட்ட தகவலின்படி, வரும் ஜூன் மாதத்தில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்துடன் புதிய தமிழ் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button