
10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் கீழ்கண்ட இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் :
https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in
சென்னை மே 16 2025 :
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின :
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது; தேர்ச்சி விகிதம் – 93.80%
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக சதவிகித தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.31% பெற்று சிவகங்கை முதலிடம்
சிவகங்கை – 98.31%
விருதுநகர் – 97.45%
தூத்துக்குடி – 96.76%
கன்னியாகுமரி – 96.66%
திருச்சி – 96.61%
*********
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியீடு :
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,07,098 பேரில் 7,43,232 பேர் தேர்ச்சி பெற்றனர்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 6.43% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
*********
சென்னை மாவட்ட அளவில் மாநகராட்சி பள்ளிகளில் சைதாப்பேட்டை மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவி தேஜஸ்வினி 500க்கு 492 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் .


பத்தாம் வகுப்பு, 11-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் வரும் 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களும், இருபதாம் தேதி பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.





