சினிமா

குட் பேட் அக்லி …  அஜித்தை வைத்து மாஸ் சம்பவம்!

அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, பிரபு, சுனில், ஜாக்கி ஷெராஃப், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் தாஸ் இரட்டை வேடங்களில் நடித்து உருவாகியுள்ள படத்திற்கு அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் கதையை பொறுத்தவரையில், கேங்ஸ்டராக இருக்கும் அஜித் குமார், தனது மனைவி த்ரிஷா சொன்ன காரணத்திற்காக ஜெயிலில் 18 ஆண்டுகள் இருக்கிறார். தனது மகனின் 18 வது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என ஜெயிலரின் உதவியுடன் முறைப்படி ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார். இந்த சமயத்தில் ஸ்பெயினில் உள்ள மகனை யாரோ கடத்தி விடுகிறார்கள். அதன் பின்னர்தான், அஜித்தின் மகனை போதைப்பொருள் வழக்கில் திட்டமிட்டு சிக்க வைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது. அஜித்தின் முன் பகையாளர்கள் தான், தனது மகனை இப்படி சிக்க வைத்துள்ளார் என த்ரிஷா கூறுகிறார். ஆனாலும் இதற்கு காரணம் யார்? அவர்களுக்கும் நமக்கும் என்ன முன்பகை என்பதைக் கண்டுபிடித்து, ஜெயிலில் அடைக்கப்பட்ட தனது மகனை மீட்டாரா என்பதுதான் மீதிக்கதை.

ட்விட்டரில் குவியும் விமர்சனங்கள்:
“மீண்டும் அஜித் படத்துக்கு அல்வா தானா?” 

படத்தின் முக்கியமான அம்சங்கள்:
– முதல் பாதி பல்வேறு கோணங்களில் பயணிக்கிறது. 
– ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்ட அஜித் காட்சிகள் சரியாக எடுபடவில்லை. 
– முதல் பாதியில் டயலாக்குகள் அதிகம். 
– படம் மெதுவாக உயர்ந்து பின்பு ஆக்ஷன் மோடுக்கு மாறுகிறது – இதற்கு ஆதிக்கு பாராட்டு! 
– அஜித் ரசிகர்களுக்காக சொல்லப்படும் வசனங்கள் ரசிக்கத்தக்கவை. 

“பேட் & அக்லி பகுதிகள்தான் அஜித் ரசிகர்களுக்கான சுவாரஸ்யம்!”
படம் “குட்” பகுதியிலிருந்து “பேட்” பகுதிக்கு நகர்ந்தவுடனேயே ரசிகர்களுக்கான ஸ்பெஷல் ட்ரீட் தொடங்குகிறது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எவ்வளவு பைத்தியக்கார அஜித் ரசிகர் என்பதை இந்தப் படத்தில் நிரூபித்திருக்கிறார். அவரது கதை மந்திரம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது. 

ரெஃபரன்ஸ் காட்சிகள்:
அஜித்தின் பழைய படங்களின் ஆக்ஷன், டயலாக்குகள் ஆகியவற்றை ரெஃபரன்ஸ் செய்யும் காட்சிகள் ரசிகர்களின் லாங்-டைம் ரிக்வெஸ்ட்டை நிறைவேற்றியுள்ளன. மேலும், கொரியன் டான் லீ, ஜான் விக், மணி ஹைஸ்ட் பிரஃபசர் போன்ற உலகளாவிய கதாபாத்திரங்களுடன் ஒப்பிடும் காட்சிகளுக்கு தியேட்டரில் மாஸ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வசனங்களும் அப்லாஸ் குவிக்கின்றன!

நடிப்பு:
– அஜித் கதையை முழுமையாக தாங்கியிருந்தாலும், சிம்ரனின் காமெடி, அர்ஜுன் தாஸின் இரட்டை வேடத்தில் மிரட்டல், ஜாக்கி ஷெராஃப்பின் லாஃபிங் கேஸ் காட்சிகள் ஹைலைட். 
– த்ரிஷா, பிரபு, பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்டோரின் நடிப்பும் பாராட்டுக்குரியது. 
– பேட் பகுதியில் அஜித்தின் வில்லன் ஷேட் + நக்கல் டயலாக்குகள் படத்தை மேலும் உயர்த்தியுள்ளன. 
– ரெடின் கிங்ஸ்லியின் நடனம் தனி காமெடி! 

இசை:
ஜி.வி. பிரகாஷ்குமார் இசை ஒவ்வொரு காட்சிக்கும் ஹீரோயிசத்தை ஊட்டியுள்ளது.  ரெட்ரோ பாடல்கள் இப்போது டிரெண்டாக இருந்தாலும், 3 பாடல்கள் கதையோட்டத்துடன் சேர்ந்திருப்பது பலன் தந்துள்ளது. க்ளைமேக்ஸ் ஃபைட்டில் “ஆளுமா டோளுமா” பாடல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

ஸ்பெஷல் மென்ஷன்ஸ்:
– ரஜினி, கமல், விஜய் ரசிகர்களுக்கான ஈஸ்டர் எக்குகள் கச்சிதமாக வைக்கப்பட்டுள்ளன. 
– “அஜித் இவ்வளவு கலாட்டா பண்ணுவாரா?”என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு அவரது நடிப்பு! 
– மாஸ் கதாபாத்திரங்களில் அஜித் நடிக்க வேண்டும் என காத்திருந்த ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு ட்ரீட்! 

 
ஆதிக் தனது வாக்கை நிறைவேற்றியிருக்கிறார்!”இந்தப் படம் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button