சினிமா

நடிகர் ஸ்ரீ எப்படி இருக்கிறார்? – லோகேஷ் கனகராஜ்  விளக்கம்

சென்னை:  ஏப் 18 2025

டிவி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்துப் பெயர் பெற்ற நடிகர் ஸ்ரீ குறித்த செய்திகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்படுகின்றன. அவரது தற்போதைய நிலையைக் கண்டு பலரும் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஸ்ரீ மருத்துவ மேற்பார்வையில் இருக்கிறார் என அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஸ்ரீ, சினிமாத்துறையில் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் குறிப்பிடத்தக்க பெயரை ஈட்டினார். அவரது முதல் திரைப்படமான ‘வழக்கு எண் 18’ பல விருதுகளை வென்றது. அதைத் தொடர்ந்து ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘வில் அம்பு’, ‘மாநகரம்’ போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார்.

உடல் நிலையில் பெரும் மாற்றம்

திரைத்துறையில் தொடர்ந்து வெற்றி பெறும் நடிகராக விளங்குவார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், ஸ்ரீ திடீரென யார் கண்ணிலும் படாமல் மறைந்திருந்தார். எனினும், சில நாட்களுக்கு முன் வெளியான அவரது சமீபத்திய படங்கள் மற்றும் வீடியோக்கள், அவரது மாறிவிட்ட தோற்றத்தால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. முன்பு இருந்த தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறி, உடல் மிகவும் மெலிந்து, ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு அவர் மாறியிருந்தார். 

Vijay TV actor Shri

பிரபல நடிகர் ஸ்ரீ குறித்த வதந்திகள் – உண்மை என்ன?

தற்போது தங்கத்தின் விலை உச்சத்தைத் தொடுவதுபோல், நடிகர் ஸ்ரீயின் வாழ்க்கையும் சர்ச்சைகளின் உச்சத்தில் உள்ளது. அவரது சமூக ஊடக செயல்பாடுகள் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. அரைகுறை உடையில் ஆபாச வீடியோக்களைத் தனது சோஷியல் மீடியா கணக்குகளில் பகிர்ந்துகொண்டதால், ஏன் இப்படி மாறினார், இவருக்கு என்ன நடந்தது?என பல கேள்விகள் எழுந்துள்ளன. 

சிலர் அவர் போதைப்பொருள் பயன்படுத்துவதாலோ அல்லது மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாலோ இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார் என வதந்திகளை பரப்பியுள்ளனர். மேலும், அவருடன் நெருங்கியவர்களும், சினிமா துறையினரும், ஸ்ரீயை இப்போது எங்கும் காணவில்லை; தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம், ஆனால் அவர் யாருடனும் பேசாமல் மறைந்துவிட்டார என்று கூறியுள்ளனர். 

ரசிகர்களின் வேண்டுதல்

ஆனால் இவர் பழைய நிலைக்கு வர வேண்டும் என்பது பலருடைய கருத்தாகவும் ஆசையாகவும் இருந்தது.அதேபோல ஸ்ரீ நடித்த மாநகரம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மிஸ்கின் போன்றோர் இவருக்கு உதவ வேண்டும் என்றும் ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வந்தனர். இந்த நிலையில் இன்று லோகேஷ் கனகராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் ஸ்ரீ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவித்திருக்கிறார்.

குடும்பத்தினரின் அறிக்கை

அந்த அறிக்கையில் நடிகர் ஸ்ரீராம் மருத்துவ சிகிச்சையில் உள்ளார் என்றும் தற்போது அவரது மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் சமூக வலைத்தளங்களில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார் என்பதை அனைத்து நலம் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் தெரியப்படுத்துகிறோம். அவர் தனது மீட்பு மற்றும் நல் வாழ்வில் கவனம் செலுத்துவதால் அவரது தனிமை தனி உரிமைக்கான தேவையை மதிக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button