
தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
சென்னை மே 8 2025 :
பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்த இந்திய ராணுவம்

இந்தியாவின் 15 இடங்களில் தாக்க முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தின் திட்டத்தை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. காஷ்மீர், பஞ்சாப்பில் 15 இடங்களில் ராணுவ நிலைகளை குறிவைத்து டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் தாக்க முயன்றது. இந்த முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.
******
தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்

தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
*****
12ஆம் வகுப்பு தேர்வு முடிவு: தமிழில் 135 மாணாக்கர்கள் 100 மதிப்பெண்

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகி உள்ளது. இதில் தமிழில் 135 மாணாக்கர்களும், அறிவியல் பாடத்தில் 9536 மாணாக்கர்களும் கணிதத்தில் 3022 மாணாக்கர்களும் 100 மதிப்பெணகள் பெற்றுள்ளனர்.

முன்னதாக தேர்வு முடிவுகள் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,. Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
. Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது. இது உங்கள் வாழ்வின் தொடக்கம் மட்டுமே. இனிதான் உங்களின் சிறப்பான phase அமையவுள்ளது என்ற positive outlook-உடன் இந்தத் தேர்வு முடிவுகளை அணுகுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணைநில்லுங்கள் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்
******
தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவே மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி, புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள், வெற்றி காணுங்கள்.
வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லும்
நீங்கள், தேர்ந்தெடுக்கும் துறைகளில்
பற்பல சாதனைகள் புரிந்து,
தலைசிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன்.
விரைவில் சந்திப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
******
உத்தரகாண்டில் ஹெவிகாப்டர் விபத்து; 5 சுற்றுலாப் பயணிகள் பலி!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் கங்கனானி அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஐந்து சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயமடைந்தனர் என்று கர்வால் பிரிவு ஆணையர் வினய் சங்கர் பாண்டே உறுதிப்படுத்தியுள்ளார். ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் நிர்வாகம் மற்றும் நிவாரணக் குழுக்கள் உள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.




