அரசியல்தமிழகம்

NDA கூட்டணியில் தொடர்வதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை – டிடிவி திட்டவட்டம்

இன்று காலை சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்….

நானோ அல்லது சசிகலாவோ அதிமுகவுக்கு சென்றால் கட்சியை கைப்பற்றி விடுவோம் என்று எடப்பாடி அச்சப்படுவதால் ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு இனி வாய்ப்பு இல்லை, நானும் தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து நெடுந்தூரம் பயணம் செய்து விட்டேன்;

இந்நிலையில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் , மோடியின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை. ஓரணியில் திரண்டு திமுகவை வீழ்த்த அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button