
தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் 3வது மனைவியான அன்னா லெஷ்னேவா, ஒரு ரஷ்ய மாடல் மற்றும் நடிகை ஆவார், இவர் தனது கணவரை முதன்முதலில் 2011 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான டீன் மார் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தார். இறுதியில், அவர்களின் நட்பு காதலாக மலர்ந்து, செப்டம்பர் 30, 2013 அன்று அவர்களின் திருமணத்தில் முடிந்தது. 45 வயதான இவர், 53 வயதான பவனை விட 8 வயது இளையவர் ஆவார்.

இந்நிலையில் இந்தத் தம்பதி 2017 ஆம் ஆண்டில் மார்க் சங்கர் பவனோவிச்-ஐ பெற்றெடுத்தனர். அன்னா லெஷ்னேவாவுக்கு முந்தைய திருமணத்திலிருந்து போலேனா அஞ்சனா பவனோவா என்ற ஒரு மகளும் உள்ளார், அவரை பவன் தத்தெடுத்துள்ளார். முன்னதாக, ஜூலை 2024 இல், அன்னா சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் கலை முதுகலைப் பட்டம் பெற்றார். அவரது நடிப்பு மற்றும் மாடலிங் பின்னணிக்கு கூடுதலாக, அவர் விருந்தோம்பல் துறையில் பணிபுரிகிறார்., பவன் கல்யாணின் 3வது மனைவியான அன்னா லெஷ்னேவா, ரஷ்யா மற்றும் சிங்கப்பூர் இரண்டிலும் சொத்துக்களை வைத்திருக்கிறார். அந்த வகையில் அவரின் சொத்துக்களின் மதிப்பு ரூ.1800 கோடி ஆகும்.
பவன் கல்யாணின் 3வது மனைவியான அன்னா லெஷ்னேவா, ரஷ்யா மற்றும் சிங்கப்பூர் இரண்டிலும் சொத்துக்களை வைத்திருக்கிறார். அந்த வகையில் அவரின் சொத்துக்களின் மதிப்பு ரூ.1800 கோடி ஆகும்.

இதனிடையே,ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் வெளிநாட்டில் தீ விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று தற்போது இந்தியா திரும்பியிருக்கிறார். இந்த நிலையில், தனது மகனின் நலம் விரும்பி அவரது மனைவி அன்னா லெஷ்னீவா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடி காணிக்கை செலுத்தினார். இந்நிலையில்; மகனுக்காக தேவஸ்தானத்துக்கு 17 லட்சம் ரூபாய் செலுத்தி அன்னதானம் போட்டிருக்கிறார். அதுவும் பக்தர்களுக்கு தன் கையாலேயே உணவு பரிமாறிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

தனது மகன் உடல்நலம் பெற்று திரும்பினால் முடிக்காணிக்கை செலுத்துவதாக ஏழுமலையான் கோவிலுக்கு வேண்டி இருந்தார் அன்னா லெஷ்னீவா.
இதன்படி ஹைதராபாத்தில் இருந்து திருப்பதி திருமலைக்கு வந்த அவர் அங்குள்ள உறுதிமொழி பதிவேட்டில் கையெழுத்திட்டார். காரணம் வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டுமென்றால் ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளது என்று திருப்பதி தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என்பது விதி.

அந்த வகையில் தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்துப் போட்ட அவர் நேரடியாக சென்று தலை முடி காணிக்கை செலுத்தினார். அன்று இரவு திருமலையில் தங்கிய அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். தொடர்ந்து அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்ததோடு ரங்கநாயகி மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
தொடர்ந்து திருப்பதி திருமலையில் தனது மகன் உடல் நலம் பெற வேண்டி பக்தர்களுக்கு வழங்கும் இலவச அன்னதானத் திட்டத்திற்கான செலவை ஏற்றுக்கொண்டார். அதற்காக 17 லட்சம் ரூபாய் காசோலையை தேவஸ்தான அதிகாரிகளிடம் கொடுத்து, தொடர்ந்து தன் கையாலேயே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.




