அரசியல்உலகம்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிர புற்றுநோய்…! எலும்பு வரை பரவி விட்டதாக தகவல்..‌!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பைடனுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள கேன்சர் தீவிரமானதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் மே 19 2025:

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக இருந்தவர் 82 வயதான ஜோ பைடன். இவர் கடந்த 2021-2025 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தார். கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் இவர் மீண்டும் போட்டியிடுவதாக இருந்தது. இருப்பினும், வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக இவர் அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

புரோஸ்டேட் புற்றுநோய்:

இதற்கிடையே இப்போது பைடனுக்கு புரோஸ்டேட் கேன்சர் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு ஏற்படுவது போன்ற சில அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டதாக பைடனின் அலுவலகம் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து பைடனுக்கு வழங்கும் சிகிச்சை தொடர்பாக அவரது குடும்பத்தினர் ஆலோசனை செ்து வருகிறார்கள்.

எலும்பு வரை பரவியுள்ளது:

இது தொடர்பாக பைடன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்த கேன்சர் மிகவும் தீவிரமாக இருக்கும் அதே வேளையில், இது ஹார்மோன் சென்சிடிவ்வாக இருப்பது தெரிகிறது. இதனால் கேன்சரை சற்று எளிதாகச் சமாளிக்க முடியும். அடுத்து என்ன மாதிரியான சிகிச்சை எடுக்கலாம் என்பது குறித்து பைடனும் அவரது குடும்பத்தினரும் ஆலோசித்து வருகிறார்கள்” என்றார். 82 வயதான ஜோ பைடனின் மகன் பியூ பைடனும் கடந்த 2015இல் புற்றுநோயால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக அமெரிக்காவில் ஒருவருக்கு கேன்சர் கண்டறியப்படும்போது அமெரிக்கப் புற்றுநோய் சங்கத்தின்படி எவ்வளவு தீவிரமானது என்பதை உணர்த்த க்ளீசன் கிரேடுகள் ஒதுக்கப்படும். இவை க்ளீசன் கிரேடு 1 முதல் கிரேடு 10 வரை இருக்கும். கிரேடு 1 என்றால் தீவிரமானது இல்லை.. கிரேடு 10 என்றால் மிக தீவிரமானது என்று பொருள். புரோஸ்டேட் கேன்சருக்கு அதிகபட்சம் கிரேடு 5 தான் ஒதுக்கப்படும்.

ஆனால், பைடனுக்கு க்ளீசன் கிரேடு 9 ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தளவுக்கு கேன்சர் தீவிரமாக இருப்பதையே அது காட்டுகிறது. நோயின் தீவிரம் அதிகமாக உள்ள நிலையில், அது எலும்பு வரை கூட பரவியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டிரம்ப் பிராத்தனை:

பைடனுக்கு கேன்சர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சீக்கிரம் குணமடைய வேண்டும் என அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், “ஜில் மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.. ஜோ விரைவாகவும் வெற்றிகரமாகவும் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் முன்னாள் அதிபர் ஒபாமா, மாஜி துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரும் பைடன் விரைவாகக் குணமடைய வேண்டும் என வேண்டிக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

புரோஸ்டேட் புற்றுநோய்:

புரோஸ்டேட் கேன்சர் என்பது ஆண்களிடையே பொதுவாகப் பரவும் ஒரு புற்றுநோயாகும்.. அமெரிக்காவில் எட்டு ஆண்களில் ஒருவருக்கு புரோஸ்டேட் கேன்சர் கண்டறியப்படுவதாக அமெரிக்கப் புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது. தொடக்கக் காலத்திலேயே இதைக் கண்டறிந்தால் இதை எளிதாகச் சிகிச்சை அளித்துக் குணமாக்க முடியும். இருப்பினும், பாதிப்பு தீவிரமானால் உயிரிழப்பும் கூட ஏற்படும். ஆண்களிடையே அதிக மரணத்தை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் இரண்டாவதாக புரோஸ்டேட் கேன்சர் இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button