சர்வதேச மற்றும் தேசிய அளவில் இன்றைய முக்கிய செய்திகள்…

சென்னை ஏப் 22 2025
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஸ்ரீநகர் சென்றடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கிறார்

தீவிரவாத தாக்குதல் சம்பவம் – பிரதமர் மோடி கண்டனம்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை
வன்மையாக கண்டிக்கிறேன்.
கொடூர செயலுக்குப் பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்,
தப்ப விடமாட்டோம்.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் உறுதி அசைக்க முடியாதது, இன்னும் வலுவடையும்.
ஜம்மு – காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்.
********
சென்னை ஏப் 22 2025

“நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் கொண்டது”-குடியரசு துணை தலைவர்.
நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் கொண்டது, அதைவிட உயர்ந்த அதிகாரம் கொண்டது எதுவும் இல்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களே உச்சபட்ச எஜமானர்கள்-டெல்லியில் நடந்த பல்கலை. நிகழ்ச்சியில்
குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பேச்சு.
********
சென்னை ஏப் 22 2025

உதகை ராஜ்பவனில் ஏப். 25,26ல் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
துணைவேந்தர்கள் மாநாட்டை குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார்.
உதகையில் நடக்கும் மாநாட்டில் பல்கலை., துணைவேந்தர்கள் பங்கேற்பார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்பார்கள்
பல்துறை வல்லுநர்களும் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்- ஆளுனர் மாளிகை.
*********

சென்னை ஏப் 22 2025
சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியாவிற்கு புறப்பட்டார். இந்த பயணத்தில் சவுதி இளவரசர் முகமது சல்மான் உள்ளிட்டவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் மேலும் வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் பற்றி ஆலோசிக்கிறார்.
*********”

போப் மறைவு – இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்-மத்திய அரசு.
துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில் நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்.
நாடு முழுவதும் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது- மத்திய அரசு.
****

கார்கே கூட்டத்தில் காலி இருக்கைகள்: காங்கிரஸ் மாவட்ட தலைவர் சஸ்பெண்ட்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கலந்து கொண்ட கட்சி கூட்டத்தில் காலியான இருக்கைகள் அதிகம் இருந்ததால் அதிருப்தி அடைந்த கட்சி தலைமை மாவட்ட தலைவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.
காந்தி, அம்பேத்கரை நினைவு கூரும் வகையில் பேரணிகள், கூட்டங்களை காங்கிரஸ் நடத்தி வருகிறது. பீகாரில் பக்சர் மாவட்டத்தில் தல்சாகார் மைதானத்தில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூட்டத்தில் உரையாற்றும்போது அங்கு போடப்பட்டிருந்த பெரும்பாலான இருக்கைகளில் யாருமே இல்லை. ஆட்கள் இன்றி இருக்கைகள் மட்டுமே இருந்துள்ளது.
அதிக மக்கள் வருவார்கள் என்ற அடிப்படையில் ஏராளமான இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. ஆனால் கூட்டம் கூடவில்லை. இதனால் காங்கிரஸ் தலைமை அதிருப்தி அடைய, அதன் விளைவாக பக்சர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மனோஜ்குமார் பாண்டேவை சஸ்பெண்ட் செய்துள்ளது.
**********

“இதுக்கு இல்லையா சார் ஒரு End-Card”
மறுசீரமைப்பு நடவடிக்கையாக Microsoft நிறுவனத்தில் தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் பணியாற்றும் சுமார் 1,000 ஊழியர்களை, இந்தாண்டு மே மாதத்தில் பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
இந்நிறுவனம் இந்தாண்டே 2,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. தொழில் போட்டி, நிதிச்சுமை போன்ற காரணங்களால் இந்த வருடத்தில் மட்டும் 111 நிறுவனங்கள் 28,728 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
********




