தமிழகம்

பாஜக தலைவர்கள் புடைசூழ நடந்த வேலுமணி இல்ல திருமணம்: காட்சிகள் மாறுமா ?

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத் திருமண விழாவில் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். அதிமுக பொதுசெயலாளர் இபிஎஸ் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.

அண்ணா​மலைக்கும் அதிமுக-வுக்கும் இடையில் நடந்த வார்த்தை வீச்சு​களின் காரணமாக, 2024-ல் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது. மோடி, அமித் ஷா அழைத்துப் பேசிய பிறகும் கூட்டணி முறிவை மறுபரிசீலனை செய்ய மறுத்​து​விட்டார் இபிஎஸ். இந்த நிலையில் தான், மார்ச் 3-ம் தேதி கோவையில் நடைபெற்ற எஸ்.பி.வேலுமணி மகன் திருமணத்தில் கே.ஏ.செங்​கோட்​டையன், பி.தங்கமணி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்​சர்​களுடன் வழக்கத்​துக்கு மீறிய நெருக்​கத்தைக் காட்டி குலைந்து பேசினார் அண்ணாமலை.

வேலுமணி​யும், இது அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டு திருமணமா பாஜக முன்னாள் அமைச்சர் வீட்டு திருமணமா என்று வியக்​குமளவுக்கு பாஜக தலைவர்​களின் கூட்டத்தையே கூட்டி இருந்​தார். தேவையற்ற சங்கடங்களை தவிர்ப்​ப​தற்காக இந்த விழாவில் இபிஎஸ் பங்கேற்​க​வில்லை. ஆனபோதும், அவரது மனைவியும் மகனும் கலந்து கொண்டனர்.

இத்தனைக்குப் பிறகும் பாஜக-வை பழனிசாமி ஒதுக்கித் தள்ளினால் அதன் பிறகு வேலுமணி வகையறாக்களை வைத்து பாஜக புது ஆட்டத்தைத் தொடங்​கலாம். இதையெல்லாம் தெரிந்துதான், “வாக்​குகள் சிதறாமல் இருக்க வேண்டும்… எங்களுக்கு ஒரே எதிரி திமுக தான்” என்றெல்லாம் பழனிசாமி இறங்கி வந்து பேச ஆரம்பித்​திருக்​கி​றார்” என்கி​றார்கள்.

இதுகுறித்து அதிமுக அமைப்புச் செயலா​ளரும் முன்னாள் அமைச்​சருமான செ.ம.வேலு​சாமி​யிடம் கேட்டதற்கு, “எஸ்.பி.வேலுமணி இல்லத் திருமண விழாவில் அண்ணா​மலைக்கு எவ்வித முக்கி​யத்​து​வமும் தரப்பட​வில்லை. அண்ணாமலை வரும்போது மேடையில் சீர் நடந்து கொண்டிருந்தது. அப்போது மேடைக்குக் கீழே அமர்ந்​திருந்த எங்களை நோக்கி வந்து அனைவரையும் பார்த்து பேசினார். அவராகவே நேரில் வந்து சந்தித்துப் பேசிச் சென்றார். பதிலுக்கு நாங்களும் மரியாதை நிமித்தமாக அவரை வரவேற்​றோம்.

மற்றபடி, நாங்கள் யாரும் அவரைச் சென்று சந்திக்​க​வில்லை. எங்களுக்கு ஒரே எதிரி திமுக தான் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்​ளார். தேர்தல் கூட்ட​ணி​யானது வேட்பாளர் அறிவிப்​புக்குப் பிறகுகூட முடிவாகலாம். கட்சி தலைமை என்ன முடிவெடுக்​கிறதோ அதை நிர்வாகிகள், தொண்டர்கள் பின்பற்​று​வார்கள்.” என்றார்.

இதையும் படிங்க.. மீன ராசி நேயர்களே.. உங்களுக்காக இன்று ஒரு பழைய நண்பர் காத்திருக்கிறார் ! @ராசிபலன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button