
சென்னை ஏப் 21 2025
திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம் 6.11 am அஸ்தமனம் 6.33 pm
21- 4-25 திங்கள் கிழமை- சித்திரை 8
தேய்பிறை- அஷ்டமி திதி 2.38 pm பின் நவமி
உத்திராடம் நட்சத்திரம் 8.37 am மேல் நோக்கு
நாள்; பின் திருவோணம் ; சாத்தியம் யோகம்
இரவு 7.04 pm பின் சுபம் யோகம்; கௌலவம்
கரணம் 2.35 pm பின் தைதுலம் பின்னிரவு 2.20 amபின் கரசை;மரணயோகம் 8.37 am பின் அமிர்த
யோகம்;திதித்வயம்; சிரவண விரதம்; நடராசர் அபிஷேகம்;
நேத்திரம்- 2 ; ஜீவன்- 1 ;
சூரிய உதயப்படி 11 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் -7.30-9.00 am வரை;
எமகண்டம்- 10.30-12.00 noon வரை ;
குளிகை- 1.30-3.00 pm வரை;
சூலம்-கிழக்கு- 9.12 am வரை; தயிர்;
சந்திராஷ்டம்ம்- மிதுனம்; திருவாதிரை
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் கடன் அடைபடும்.
மிருகசீரிஷம்,சித்திரை, அவிட்டம்
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 11 நிமிடம்
கடந்து நடக்கும்;
6-7 am; 12-2 pm; 6-9pm; 10-11pm
சுபகாரியங்கள்;
புது நகை வாங்க, ஆடை உடுத்த, புது கடை
திறக்க , ஹோமசாந்தி செய்ய, பயிர்த்தொழில்
செய்ய,கடன் தீர்க்க, விஷ்ணு பலி செய்ய நல்லது

இன்றைய ராசி பலன்
மேஷம்-தொழில் அபாரம், ஏமாந்த பணம் வரும்,
கடன் வசூல், தம்பதி பிரியம், வெற்றி முகம்
ரிஷபம்-பாக்கியம் மனவலிமை,உறவு பலம்,
தனலாபம், விபரீத ராஜ யோகம், சாதனை
மிதுனம் -சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம்
விவாதம், பயணம், புது முயற்சி தவிர்,கோபம் தவிர்
கடகம்-சந்திரன் பார்வை, தொட்டது துலங்கும்,
புது அறிமுகம், விழா முன்னிலை, புது ஏஜென்ஸி
சிம்மம்-அதிபதி உச்சம், நல்லது நடக்கும்,
பட்ஜெட் கறார், யோசி பின் செய்க, புரிதல் நன்று
கன்னி-குரு பார்வை, முன்னோர் அருள்,
பயணம் கவனம், சுபர் பார்வை,இன்ப அதிர்ச்சி
துலாம்-தாய்வழி உதவி, அரசு/ வங்கி உதவி,
ஆதாயம், ஆதரவு, விபரீத ராஜ யோகம்
விருச்சிகம்- நோக்கம் நிறைவு, பூர்வீக பணம்
வரும், வழக்கு சாதகம், கரகலப்பு, அயலார் உதவி
தனுசு-சுபநிகழ்வு, செல்வாக்கு, நேர்த்திக்கடன்,
பூர்வீக பிரச்னை தீரும், வீடு நவீனம், வாகனயோகம்
மகரம்-குதூகலம்; நிதானம், திறமை கூடும்,
சேமிப்பு; நல்ல தீர்ப்பு, பயிர்த்தொழில் நன்று
கும்பம்-சுபவிரயம், மன உறுதி, தம்பதி பிரியம்,
பயிர்த்தொழில் நன்று,நல்லது நடக்கும்
மீனம் -நினைத்தது நடக்கும், வசீகரம், புது
யுக்திகள்,கலகலப்பு, பணவரவு,நன்மை




