உலகம்

வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் ராக்கெட்: சோதனையின்போது சோகம்

நியூயார்க்: சோதனையின்போது எலான் மஸ்க்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. வெடித்து சிதறிய ராக்கெட்டின் குப்பைகள் காரணமாக, அமெரிக்காவில் 4 விமான நிலையங்களில் தற்காலிகமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது

வெறும் 10 நாட்கள் பயணமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 9 மாதங்களாக அங்கேயே சிக்கியுள்ளார். அவரை மீட்டு கொண்டு வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஒன்று அடுத்த வாரம் விண்ணில் ஏவப்படுகிறது. இப்படி இருக்கையில், நேற்று நடந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பரிசோதனை ஒன்று தோல்வியில் முடிந்திருப்பது விவாதங்களை எழுப்பியிருக்கிறது. அமெரிக்காவின் புளோரிடாவின் பஹாமாஸின் ஹாக் கேயில், ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் விண்கலம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ராக்கெட் வெடித்து சிதறியிருக்கிறது. விண்வெளி குப்பைகள் காரணமாக மியாமி, ஃபோர்ட் லாடர்டேல், ஆர்லாண்டோ மற்றும் பாம் பீச் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. சுமார் 1 மணி நேரம் வரை விமான போக்குவரத்து இந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விமான நிலையங்களுக்கு வரும் விமானங்கள் அனைத்தும் மாற்று விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன.

இதையும் படிங்க.. வட கொரிய அதிபரின் மனைவியாக இருப்பது இவ்வளவு கடினமா ?

ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்தது. எனவே உடனடியாக தானாக அழித்துக்கொள்ளும் வகையில் செய்யப்பட்ட புரோகிராம் ஆக்டிவேட் செய்யப்பட்டு, ராக்கெட் வெடிக்கவைக்கப்பட்டது. ராக்கெட்டின் துண்டுகள் கரீபியன் கடலில் விழுந்திருக்கின்றன. இந்த தோல்வியை ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு பார்த்துக்கொள்கிறோம் என்று ஸ்பேஸ் எக்ஸ் டீம் கூறியிருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button