
புதுடெல்லி மே 10 2025:
பாகிஸ்தான் மீதான தாக்குதலை மாலை 5 மணி முதல் நிறுத்தியதாக இந்தியா அறிவித்துள்ளது.
நிலம், வான், கடல் என அனைத்து விதமான தாக்குதல்களையும் இந்தியா நிறுத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார்.

“அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை மறுநாள் பேச்சுவார்த்தை” – விக்ரம் மிஸ்ரி.
“இந்தியா – பாகிஸ்தான் இடையே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை மறுநாள் (மே.12) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது” என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் டார் அறிவிப்பு.
பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம், நாட்டின் வான்வெளி அனைத்து விமானங்களுக்கும் முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் நடுநிலையான இடத்தில் பரந்த அளவிலான பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக் கொண்டுள்ளன என அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தை
போர் பதற்றத்திற்கு மத்தியில் இந்தியா, பாகிஸ்தான்
இடையே முதல் தொலைபேசி உரையாடல்

DGMO-க்களுக்கு( Director General of Military Operations (DGMO))
இடையே ஹாட்லைன்
இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது
பாகிஸ்தான் DGMO பதற்றத்தை குறைக்க
கோரியதாக தகவல்



