அரசியல்இந்தியாஉலகம்

அடுத்த வல்லரசு சீனா அல்ல இந்தியா…! மாறும் காட்சிகள்….

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியாவும்-அமெரிக்காவும் ஸ்டேட்டர்ஜிக் எதிரிகளாக மாறுகிறதா? என்ற கருத்துகள் எழுந்துள்ளன.

புதுடெல்லி மே 18 2025:

உக்ரைன் போர் வந்தபோது உலக நாடுகளின் சமன்பாடுகள் பெருமளவில் மாறியது. அந்த போரின் நோக்கம் ஒரே கல்லுல பல மாங்காய்கள் என்று திட்டமிட்டது டீஃப் ஸ்டேட் ஆஃப் அமெரிக்கா. ஆரம்பத்தில் அதன் திட்டங்கள் பெருமளவில் திட்டமிட்டபடியே நடந்தது.

1) ரஷ்யாவை நீண்டகால போரில் சிக்கவைப்பது. போரின் மூலம் அதன் பொருளாதாரத்தை சிதைத்து, நாட்டை மேலும் பல சிறு நாடுகளா உடைப்பது என்பது அதன் நோக்கம். அதற்காக

அ) ஐரோப்பா எரிபொருளுக்காக ரஷ்யாவை சார்ந்திருந்தது, அதன் மறுபக்கம் ரஷ்யா ஐரோப்பாவின் வருமானதை நம்பி இருந்தது.

ஆ) ரஷ்யாவின் டெபாஸிட்டுகளை அமெரிக்காவில் முடக்கியது. அதே சமயம் அதன் டெபாஸிட்டுகளையும், டாலர் வர்த்தகத்தையும் தடைவிதித்தது.

2) ஐரோப்பாவின் எரிபொருள் தேவை ரஷ்யாவிற்கு மாறாக மற்ற நாடுகளை நாட வேண்டி வந்ததால் கச்சா எண்ணெய் விலை கண்டமேனிக்கு எகிரும். அது ஐரோப்பாவின் பொருளாதாரத்தை பாதிப்பதால் அமெரிக்க டாலருக்கு மாற்றாக இருந்த யூரோவின் € வீழ்ச்சி, டாலரை $ ஒரே உலக கரன்சியாக வைத்திருக்க உதவும்.

3) எல்லா உலக நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, ஏற்படும் பண வீக்கத்தால் டாலருக்கு மிகப்பெரிய டிமாண்ட் வளரும். அதனால் அது இஷ்டத்திற்கு டாலரை பிரிண்ட் செய்து கொள்ளலாம். அதன் எல்லைமீறிய கடனுக்கு அது ஒரு தற்காலிக தீர்வாகும்.

4) அமெரிக்காவின் பழைய ஆயுதங்களை உக்ரைனின் தலையில் கட்டி, மேலும் ஆயுத விற்பனையை பல மடங்கு உயர்த்தி, உக்ரைனை கடனாளியாக்கி, அடிமையாக்கி, அவனை வைத்து ரஷ்யாவை வீழ்த்துவது.

இப்படி டிஸைன் டிஸைனா திட்டமிட்ட அமெரிக்காவின் கனவு, இந்தியா, சீனா மற்ற சில நாடுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணேய் வாங்கியதால் நசுங்கி நாசமாகிப்போனது. அது நினைத்த க்ரூட் ஆயில் விலை ஏறவில்லை. ஆனால் யூரோ யூனியன் பெரிய பொருளாதார பெரும் நாசத்தை சந்தித்தது.

மேலும் BRICS நாடுகள் இணைந்து கொண்டுவர முயன்ற டாலருக்கு மாற்றான உலக நாணயம், அமெரிக்க டாலரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது.
அதன் முடிவில் ரஷ்யாவிற்கு விரித்ய வலையில் மாட்டி, அமெரிக்கா பெரிய பொருளாதார பிரச்சினையையும், கடனையும் சந்திக்க வேண்டியதாகிவிட்டது.

அதன் பின் ட்ரம்ப் வந்து டீஃப் ஸ்டேட் ஆஃப் அமெரிக்காவை உடைக்க, அமெரிக்க, ரஷ்ய உறவு முன்னேறியது ஆனால் அதன் உறவு யூரோ, சீனா உற்பட பல நாடுகளுடனும், கனடா, மெக்ஸிகோ போன்ற அண்டை நாட்டுடனும் மோசமாகியது. அதன் டாரிஃப் வார் உலக நாடுகளுடன் பெரிய உரசலை செய்தாலும் அதற்கு பொருளாதார ரீதியில் ஒரு நல்வாய்ப்பையே கொடுத்தது.

இஸ்ரேலின் தீவிராவாதத்துக்கு எதிரான போரினால் சமன்பாடுகளில் ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை.

இந்த நிலையில் அமெரிக்கா இந்தியாவை ஒரு ஸ்டேட்டர்ஜிக் பார்ட்னராக பார்த்தது. அதற்கு முக்கிய காரணம் சீனா தன்னை அடுத்த வல்லரசாக்க நினைக்க ஆரம்பித்ததால், அதை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவி மிக அவசியம் என்பதால்.

அதுமட்டுமல்ல அமெரிக்க, ரஷ்ய உறவில் இருந்த பெரிய விரிசலை. உரசலை ஓரளவு தீர்மானிக்க உதவியது. BRICS கரன்ஸி சீனாவின் யுவானை டாலருக்கு மாற்றாக கொண்டுவருவதை தடுத்ததால், அதற்கு இந்தியாவின் உதவி பெருமளவில் உதவியது.

இந்த நிலையில் இந்திய – பாகிஸ்தான் போர் அமெரிக்காவின் ஸ்டேட்டர்ஜிக் பாட்னர்ஷிப் மற்றும் உலக நாடுகளுக்கு இடையே ஒரு புதிய அத்தியாயத்தை தோற்றுவிக்கலாம். மாற்று அணியை இது உருவாக்கலாம். அதற்கு காரணமென்ன என்பதை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்!

1) இந்தியாவிற்கு பாகிஸ்தான் என்றுமே ஒரு தொண்டையில் சிக்கிய முள்ளாகி, அதன் வளர்ச்சியை, முன்னேற்றத்தை தடுக்க உதவும் என்பதால். ஏனெனில் சீனாவிற்கு அடுத்ததாக நீண்டகால எதிரியாக மாறும் வாய்ப்பு அதிகம் இந்தியா இருப்பது அதற்கு காரணம். பாகிஸ்தானை இந்த போரில் பஸ்பமாக்கிய பின்னர், இந்தியாவின் நீண்டகால பெரிய முட்டுக்கட்டை முடிவுக்கு வந்தது.

2) பாகிஸ்தான் போரில் சீனாவின் ஆயுதங்கள் முதன் முதலாக நேரடி போரில் பரிசோதிக்கப்பட்டு. அது வழக்கத்தைவிட மோசமான டுபாக்கூர் என்றாகிவிட்டது. இந்தியா அதன் HQ-9, Ly-80, HQ-16, PL-15 என்று அதிமுக்கிய ஆயுதங்களை அர்த்தமற்றதாகிவிட்டது. அதனால் இப்போது பலவீனமான சீனாவை அமெரிக்காவாலே ஈஸியாக சமாளிக்க முடியும் என்பது உறுதியாகிவிட்டது எனும்போது இந்தியாவின் தேவை இப்போது அவசியமற்றதாகிவிட்டது.

3) மாறாக இந்தியாவின் ஆயுத வலிமை உலகதரத்தில், பல விஷயங்களில் வல்லரசு நாடுகளுக்கு இணையாகவும், சில விஷயங்களில் அமெரிக்காவின் ஆதிக்கத்தையும், பாதுகாப்பையும் தகர்க்கக்கூடியதாகிவிட்டது.

குறிப்பாக அதன் வான் பாதுகாப்பு சிஸ்டம், அதன் உலகத்தரம் வாய்ந்த ஏவுகணைகள். ஆம், அதை பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்காவின் மிக பாதுகாப்பான அணு ஆயுத கிடங்கை தாக்கி அழித்தது என்றால், அதனால் அக்னியை வைத்து அதே செயலை அமெரிக்காவிலும் செய்ய முடியும் என்பதால் இப்போது அடுத்த வல்லரசுக்கான நாடு சீனாவல்ல இந்தியாவே.

4) இந்தியா ரஷ்யா, இஸ்ரேல், ஃப்ரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான் என்று பல நாடுகளுடனும், ஆஃப்ரிக்க உலக நாடுகளின் நம்பிக்கையையும் இந்தியா பெற்றுவிட்டது. அதனால் முன்பு போல அதை தனிமைப்படுத்துவது அவ்வளவு எளிதில் முடியாது.

5) இந்தியாவின் ஆயுதங்களான பிரம்மோஸ், ஆகாஷ், இஸ்ரேலுடன் கூட்டு சேர்ந்து தயாரித்த பராக்-8 வான் பாதுகாப்பு, உலக தரம் வாய்ந்த ட்ரோன்கள், ரஷ்யாவின் S-400, அதன் வலிமையான கப்பற்படை, நீர்மூழ்கி கப்பல்கள், அண்ஜ் ஆயுத டிட்டரென்ஸ் என்று எல்லாமே டாப் கியரில் நிரூபித்துள்ளதால், இனிமேல் உலக நாடுகள் தங்கள் ஆயுதங்களுக்கு அமெரிக்காவை, சந்தி சிரித்த சீனாவை, டுமீல் டுருக்கியையும் மற்ற நாடுகளையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை.

மேலும் அதன் தேஜஸ் ரகபோர் விமானங்கள் அதன் போர் விமானங்களின் ஆதிக்கத்தையும் இன்னும் ஐந்தாண்டுகளில் கைப்பற்ற தொடங்கலாம். அது அடுத்த விமானந்தாங்கி கப்பலை கட்ட ஆரம்பித்துள்ளது. அடுத்து மற்ற நாடுகளுக்கும் கட்டித்தர சம்மதம் தெரிவித்துள்ளது.

இவையெல்லாம் 100 ஆண்டுகால அமெரிக்காவின் ஆயுத டாமினன்ஸை வெகுவாக வீழ்த்த வாய்ப்புள்ளது.

6) இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கைப்பிடியில் இருந்த மருத்துவ மாஃபியாக்களின் ஆதிக்கத்தை கோவிட்டின்போது வீழ்த்திவிட்டது. அதுமட்டுமல்ல, அதற்கு இருந்த ட்ரில்லியன் டாலர் பிஸினஸை தடுப்பூசியை தயாரித்து, ஏழை நாடுகளுக்கு இலவசமாக கொடுத்து, அதன் வாயில் மண் அள்ளிப்போட்டுவிட்டது. இன்று இந்தியாவின் டாமினன்ஸ்தன் மருத்துவ உலகில் கொடிகட்டி பறக்கிறது.

7) உலக நாடுகள் தடுமாறும்போது இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. அதன் கட்டமைப்புகள் பெருமளவில் மேம்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா போன்ற உற்பத்தி சார்ந்த வளர்ச்சியிலும், சர்வீஸ் செக்டாரிலும் அதன் ஆதிக்கம் உலகெங்கும் கொடிகட்டி பறக்கிறது. விவசாய உற்பத்தி, கச்சா எண்ணெய்க்காக சார்ந்திராமல் மிகப்பெரிய கிரீன் என்ர்ஜி உற்பத்தி என்று அது இரு சுயசார்பு நாடாக மாறிவருகிறது.

8) இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதன் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. மீதம் இருக்கும் கட்சிகள் குறிப்பாக காங்கிரஸும், திமுகவும், திரிணமுள் காங்கிரஸும் நாட்களை எண்ணிக்கொண்டு, முடிவுக்கு வந்துவிட்டது. அவர்கள் மீது இருக்கும் ஊழல் வழக்குகளை தாண்டி இனிமேல் தப்பிப்பது அபூர்வம்!

9) அதன் மிகப்பெரிய பிரச்சினையான காஷ்மீர், பாகிஸ்தானோடு பஸ்பமாகிவிட்டது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்த பிரச்சினை வேகமான வளர்ச்சி பாதை நோக்கிய மாற்றம் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகி வருகிறது. ஆங்காங்கே இருந்த ஜாதி பிரச்சினைகள், இன பிரச்சனை எல்லாம் வீழ தொடங்கிவிட்டது. அதைவிட மிக முக்கியமாக மதமாற்றம், தீவிரவாதமும் வீழப்போகிறது.

அதையெல்லாம் வைத்து அசிங்க அரசியல் செய்து ஆடிவந்த அமெரிக்கா, டீஃப் ஸ்டேட் ஆஃப் அமெரிக்காவை வீழ்த்தியபின், இன்று தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டது என்ற நிலைக்கு போய்விட்டது. பற்றாகுறைக்கு, உலகெங்கும் எதிரிகள்.

குறிப்பாக பாகிஸ்தானில் இருந்த அமெரிக்காவின் அணு ஆயுதத்தை தாக்கி அழித்தபின்னர், பெரியண்ணன் மிரள ஆரம்பித்துள்ளது.

அதன் விளைவாக சீனாவும் அதன் ஆயுத பராக்கிரமம் சந்தி சிரித்ததால், அமெரிக்காவோடு சேர்ந்து மீண்டும் தனது சரியும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முயலும். அமெரிக்கா, இப்போது சீனாவை வைத்து, இந்தியாவின் பொருளாதாரத்தையும், எல்லை பிரச்சினையை இந்தியாவிற்கு எதிராக சீண்டலாம்.

ஆனால் அமெரிக்கா பெரியளவில், அல்லது வெளிப்படையாக அதை செய்யாது. அமெரிக்க நிறுவனங்கள் கொடுக்கும் டெக்னாலஜியை தடுக்கலாம் அல்லது தாமதபடுத்தலாம். இப்போது இருக்கும் பொருளாதார மந்த நிலையில் , அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களை, விசா போன்ற வகையில் பிரச்சினையை கொடுத்து வெளியேற்றலாம்.

குறிப்பாக Artificial Intelligence, Automation, Recession எனற மூன்றும் புதிய குடியேறரத்தை தடுத்து, Green Card விஷயத்தில் தாமதம் ஏற்படுத்தி, அவர்களை வெளியேற்ற வாய்ப்புண்டு. ஆம், இனிமேல் நிறைய வேலையாட்களுகு தேவை இருக்காது போகலாம்!

குறிப்பாக IT Field ல் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சாதகமாக்கிக் கொண்டு, இந்தியர்களை வெளியேற்றி, அமெரிக்கர்களுக்கு வேலை கொடுப்பதன் மூலம், அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வாய்ப்புண்டு. அதை நாம்.தவறென்றுசொல்ல முடியாது.

மேலும் Apple, GE, Boeing, TESLA போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் செய்யும் முதலீடுகளை தடுக்க வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஆனால் அமெரிக்காவில் பல முக்கிய பொறுப்புகளில் இந்தியர்கள் இருப்பதால், அவர்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கைகளால், அவர்கள் சேமிப்பையும், அனுபவத்தையும் இந்தியாவிற்கு கொண்டுவந்தால் அது மேலும் அமெரிக்காவிற்கு சிக்கலை கொடுக்கும்.

அவையெல்லாம் ட்ரம்புக்கு இன்னொரு முறை ஜனாதிபதியாகும் (?) வாய்ப்பை தடுக்கலாம், அல்லது.எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எடுக்கும் அவசர முடிவுகள், அவருக்கும், நாட்டுக்கும் எதிராகலாம். அதனால் பண வீக்கம் அதிகரிக்கும். முன்பு போல டாலரை வைத்து வாழ்ந்த வாழ்க்கை கைகொடுக்காது போகலாம்.

ஆனாலும் இந்த பிரச்சினையை இந்தியா ஆயுத ரீதியில் தன்னை மேம்படுத்திக் கொண்டு, பொருளாதார ரீதியில் அதை ஆரோக்கியமான போட்டியாக எதிர்கொள்ளும்.

குறிப்பாக அமெரிக்கா, சீனாவால் பாதிக்கப்பட்ட ஏழை ஆஃப்ரிக்க நாடுகள், ரஷ்யா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா நாடுகளுடன் இணைந்த இந்தியா பொருளாதார ரீதியில் அமெரிக்க, சீன கூட்டணியை வலுவாக எதிர்கொள்ளலாம்.
அது அமெரிக்க ஆதிக்கத்தை குறைக்கும், வீழ்த்தினாலும் ஆச்சரியமில்லை!

எனவே இந்திய-பாகிஸ்தான் போர் உலக நாடுகளின் ஈகுவேஷனை மாற்றிய ஒரு டார்னிங் பாய்ண்டாக இருக்கலாம்!

நடப்பவை எல்லாம் நல்லதற்கே!

நன்றி: செய்திக்கதிர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button