இந்தியாவணிகம்

மிடில் கிளாஸ் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. சரிவில் பணவீக்கம்.!!

மார்ச் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்க தரவுகளை நேற்று மத்திய அரசு வெளியிட்ட நிலையில், மாலையில் சில்லறை பணவீக்க அளவுகளை வெளியிட்டது. உணவு பணவீக்கம் குறைந்துள்ளது என்பதை மொத்த விலை பணவீக்கத்திலேயே பார்த்தோம், இந்த நிலையில் உணவு பணவீக்கம், சில்லறை பணவீக்கத்தில் பெரும் பங்கீட்டை கொண்ட நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து குறைந்து வருவது மூலம் இது நடந்துள்ளது.

மத்திய அரசு  வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, மார்ச் மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.34% ஆக குறைந்துள்ளது. இது பொருளாதார வல்லுநர்கள் கணித்த 3.60% ஐ விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 3.34 சதவீத பணவீக்கம் என்பது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பதிவான மிகக் குறைவான அளவீடு என்று மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாத சில்லறை பணவீக்கம் 3.61% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் மார்ச் மாதத்தில் வருடாந்திர அடிப்படையில் 2.05 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஜனவரி மாதத்தில் பதிவான 2.38 சதவீதத்திலிருந்து பெரிய அளவில் குறைந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவை மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button