இந்தியாஉலகம்

விமானத்தில் பயணித்த அனைவருமே மரணம்..(விபத்து காட்சிகள்)

அகமதாபாத் விமான விபத்து குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

அகமதாபாத் ஜூன் 11 2025:

அகமதாபாத்தில் நிகழ்ந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேருமே உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், குடியிருப்புப் பகுதியில் இந்த விமான விபத்து ஏற்பட்டதால் மேலும் பலர் மரணம் அடைந்துள்ளனர்.ஒட்டுமொத்தமாக 300 பேர் வரை உயிரிழந்திருப்பதாக குஜராத் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

விபத்து காட்சிகள்

விபத்து காட்சிகள்
விபத்து காட்சிகள்

இதயத்தை நொறுக்கிவிட்டது!

ஆமதாபாத் துயரச் சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது; வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயத்தை நொறுக்கிவிட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உதவுவதைக் கண்காணித்து வருகிறேன்: பிரதமர் மோடி

மனதை நொறுக்கிய பேரழிவு!

ஆமதாபாத்தில் நடந்த துயரமான விபத்து குறித்து அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்; மனதை உடைக்கும் பேரழிவு. பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்; விவரிக்க முடியாத இந்த சோகமான நேரத்தில் அவர்களுடன் தேசம் துணை நிற்கிறது.

  • ஜனாதிபதி திரவுபதி முர்மு

உதவி செய்ய தயார் – போயிங்

விமான விபத்து தொடர்பாக இந்தியாவுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்; அவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம். பயணிகள், விமான பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்

  • போயிங், விமான கட்டுமான நிறுவனம்

ஒருங்கிணைந்த நடவடிக்கை!

ஆமதாபாத் விமான விபத்தைத் தீவிரமாகக் கண்காணிக்கிறோம். அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் அவசர உதவிக்கான முகமைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

  • ராம் மோகன் நாயுடு, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர்

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் வேதனை!

பிரிட்டனை சார்ந்தவர்களை ஏற்றி வந்த விமானம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான செய்தியை கேட்டு மனம் உடைந்தேன்.

விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறேன்.

இந்த துயரமான நேரத்தில் விமானத்தில் பயணித்தவர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்திற்காகவும் வேண்டி கொள்கிறேன் – பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button