தமிழகம்லைஃப் ஸ்டைல்
முதல் குளு..குளு மின்சார ரெயில்… சென்னையில் அறிமுகம்..!

சென்னை ஏப் 19 2025
சென்னையில் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ஏ.சி. மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் 12 பெட்டிகளுடன் ஏசி புறநகர் ரயில் தயாரிக்கும் பணிகள் முடிந்து அண்மையில் சோதனை ஓட்டம் நடந்தது.
சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில் புறநகர் ஏ.சி. ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

காலை 7 மணிக்கு சென்னை கடற்கரை – தாம்பரம் செங்கல்பட்டு வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்குகிறது.
1,116 பேர் அமர்ந்தும், 3,796 பேர் நின்று செல்லும் வகையில் புறநகர் ஏ.சி. ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.





