சினிமா

விஜயின் 'ஜன நாயகன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு !!

ஹெச்.வினோத் இயக்கி, தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜன நாயகன்’ திரைப்படம், எதிர்வரும் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்திற்குள் விஜய்யின் அனைத்து காட்சிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதர நடிகர்களின் காட்சிகள் மற்றும் ஒட்டுமொத்த படப்பிடிப்பு மே மாதத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளது. இதற்கு முன்பு இப்படத்தின் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் பரவியிருந்தன. தற்போது, அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, படக்குழு அதிகாரபூர்வமாக ஜனவரி 9-ம் தேதி வெளியீட்டை உறுதி செய்துள்ளது.

‘ஜன நாயகன்’ திரைப்படத்த்தில் விஜய்யுடன் சேர்ந்து, பாலிவுட் நடிகர் பாபி தியோல், பிரபல நடிகைகள் பூஜா ஹெக்டே, பிரியாமணி, மலையாள நடிகை மமிதா பைஜு, இயக்குநர்-நடிகர் கவுதம் வாசுதேவ மேனன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் பிரமாண்டமான திரைப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றது. ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணியாற்ற, இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முக்கியமாக, ‘ஜன நாயகன்’ திரைப்படம் விஜய் தனது முழுமையான அரசியல் பயணத்திற்காக தேர்ந்தெடுத்த கடைசி திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம், திரையரங்குகளில் மட்டுமல்லாது, அரசியல் வரலாற்றிலும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் இப்படத்திற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button