அரசியல்தமிழகம்

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி விடுவிப்பு…

தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மனோ தங்கராஜூக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ஏப்ரல் 27 2025

தமிழக அமைச்சரவையில்  விரைவில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த சூழ்நிலையில் தற்போது அதிரடி மாற்றங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதன்படி, செந்தில்பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பதவியை ராஜினாமா  செய்தனர்.

இலாக்காக்கள் மாற்றம்:

அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பதவி

மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ், நாளை மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அவர் அமைச்சராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button