திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது: பிரதமர் மோடி

திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துள்ளது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். அதில், வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்! என் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, நாம் தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்வோம்; மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம். மாமனிதர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் ஓர் அரசை நாம் உறுதிசெய்வோம் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை நமது கூட்டணி செய்து முடிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.




