தமிழகம்

16 ஆண்டுகளுக்குப் பிறகு முன்கூட்டியே தொடங்கிய பருவ மழை

தமிழகத்தில் மார்ச் ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் இயல்பான மழை அளவை விட 92 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது -வானிலை ஆய்வு மையம்

சென்னை மே 24 2025:

வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும் என‌ சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ன்

தென்மேற்கு பருவ மழை நகர்வுகள் மற்றும் தமிழகத்தில் மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள கன மழை எச்சரிக்கைகள் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வானிலை ஆய்வு மையத்தில் அதன் தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை இன்று தொடங்கி உள்ளது, மேலும் இது 16 ஆண்டுகளுக்கு பிறகு முன்கூட்டியே தொடங்கி உள்ளது, இதற்கு முன்பு 2009 ஆண்டு இது போன்று முன்கூட்டியே பருவ மழை தொடங்கியது

நேற்று தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை 08.30 மணி அளவில் மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று , ரத்னகிரிக்கு வடக்கு-வடமேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிலவுகிறது. இது மெதுவாக கிழக்கு திசையில் நகர்ந்து இன்று நண்பகல் தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில், இன்று நண்பகல் ரத்னகிரி மற்றும் தபோலிக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும்.

வங்கக்கடலை பொறுத்த வகையில்
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்

தென்மேற்கு பருவமழை மற்றும் அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை கருத்தில் கொண்டு
தமிழகத்தின் தூத்துக்குடி மற்றும் பாம்பன் துறைமுகங்களில் மூன்றாம் எண் எச்சரிக்கை கூண்டும், தமிழகம் புதுவை காரைக்கால் உள்ளிட்ட மற்ற துறைமுகங்களில் ஒன்றாம் என் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது

இன்று கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்றும் நாளையும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் பொழிந்த மழை கணக்கெடுப்பு பொறுத்தவரை இயல்பாக மழை அளவான 11 செ மி, தற்பொழுது பதிவான மழையின் அளவு 21 சென்டிமீட்டர்
இது இயல்பைவிட 92 சதவீதம் அதிகம்.

சென்னையில் பொறுத்தவரை இயல்பான அளவான 44 மிமி, ஆனால் மழையின் அளவு 92 மிமி, இது 110 சதவீதம் அதிகம்

தென்மேற்கு பருவமழை அறிவிப்பதற்கு சில நிபந்தனைகள் உள்ளது கேரளாவில் பொழியும் மழையை ஒப்பிட்டு , கடல் பகுதிகளில் இருக்கும் காற்றழுத்த தாழ்வு மையங்கள் ஆகியவையை கண்காணித்து வருவதால் தென்மேற்கு பருவமழை முன்பாகவே வருகிறதா என அறிகுறிகளை வைத்து கணக்கிடலாம் ஆனால் இப்போதே வடகிழக்கு பருவமழை தொடர்பாக அறிவிப்பது கடினம்

மீனவர்களுக்கான எச்சரிக்கை தமிழக கடலோரப் பகுதிகளில் 24 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தென்தமிழக கடலோர பகுதிகள் மன்னார் வளைகுடா குமரி கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் , வங்க கடல் பகுதிகள் பொறுத்தவரை அதே போல் சூறாவளி காற்று வீசும் , அரபிக்கடல் பகுதிகளில் 24 முதல் 28 மே மாதம் வரை மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அமுதா தெரிவித்தார்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button