
கண்ணூர், பினராயில் நடைபெற்ற #பினராயிபெருமா கலை மற்றும் கலாச்சார விழாவில் முன்னணி நடிகர் சிவ கார்த்திகேயன் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் அழைப்பின் பெயரில் கலந்து கொண்டது தமக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்றும், கேரளாவின் மாண்புமிகு முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் அவர்கள், பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. முஹம்மது ரியாஸ், மாண்புமிகு சபாநாயகர் திரு. A. N. ஷம்சீர், அன்புக்குரிய ஆசிஃப் அலி, மற்றும் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ‘தி இந்து’ திரு.ராம் அவர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் நடிகர் சிவ கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கேரள மக்களின் அன்பும், அரவணைப்பும் தம்மை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்ததாகவும், இந்த மறக்க முடியாத நினைவுகளுக்கு மிக்க நன்றி என்றும் நடிகர் சிவ கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.




