அண்ணாமலை கைது.. அரசின் மக்கள் விரோத போக்கு- டிடிவி தினகரன்

சென்னை: டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் ஆயிரம் கோடி ரூபாய் ஊழலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கண்டித்துள்ளார்.

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக இதுவரை வாய் திறக்காத திமுக அரசு, ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்த பாஜகவினரைக் கைது செய்துள்ளது கண்டனத்திற்குரியது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தவறும் காவல்துறை, அரசுக்கு எதிராகப் போராடியவர்களைக் கைது செய்திருப்பது திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கையே காட்டுகிறது. எனவே, கைது செய்யப்பட்ட பாஜகவினர் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், இதுபோன்ற அடக்குமுறைகளை கைவிட வேண்டும் என தமிழக அரசையும் காவல்துறையையும் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
விரிவாக படியுங்கள்.. டாஸ்மாக் முறைகேடு.. முற்றுகை போராட்டத்திற்கு முயன்ற அண்ணாமலை கைது !




