உலகம்

வேற்று கிரகத்தில் உயிரினங்கள்…  அறிகுறிகள் உள்ளதாக இந்திய வம்சாவளி விஞ்ஞானி தகவல்

வேற்று கிரகத்தில் உயிரினம் வாழ்வதற்கான அறிகுறிகள் உள்ளதாக இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார்.

நியூயார்க் ஏப் 20 2025

K2-18b என்ற தொலைதூர கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை கண்டறிந்துள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி நிக்கு மதுசூதன் தெரிவித்துள்ளார்.

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் தனது குழுவினருடன் K2-18b கிரகத்தை ஆய்வு செய்ததில், அதில் டைமெத்தில் சல்பைடு மற்றும் டைமெத்தில் டை சல்பைடு வாயுக்கள் இருப்பதை கண்டறிந்ததாக அவர் கூறியுள்ளார்.

இவை கடலில் இருக்கும் பாசிகள் வெளியிடும் வாயுக்கள் என்பது  தெரியவந்துள்ளது. இதன் மூலம் அந்த வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button