
தமிழ்நாடு மற்றும் தேசிய அளவிலான முக்கிய செய்திகளை இங்கு பார்ப்போம்.
சென்னை ஏப்ரல் 29 2025
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது

டெல்லியில் நடந்த விழாவில் நடிகர் அஜித் குமாரின் கலை சேவையை பாராட்டி அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம பூஷண் விருதை வழங்கினார். இந்த நிகழ்வில் நடிகர் அஜித் குமார், மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் உடன் கலந்துகொண்டார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் அஜித் குமாருக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பத்ம பூஷண் விருதை வழங்கி கௌரவித்தார். கலைத்துறையில் அவரது சிறந்த பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சமையல் கலை வல்லுநர் டாக்டர் கே.தாமோதரன், வர்த்தகம், தொழில் துறையில் சிறந்த பங்களிப்புக்காக ஆர்.ஜி.சந்திரமோகன், இலக்கியம், கல்வித் துறையில் சிறந்த பங்களிப்புக்காக டாக்டர் லட்சுமிபதி ராமசுப்பையர், சிற்பக் கலையில் சிறந்த பங்களிப்புக்காக ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி ஸ்தபதி ஆகியோருக்குப் பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
****
கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பினராயி விஜயன் வீடு மற்றும் அலுவலகத்திற்கு மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
*****
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 16 யூ-ட்யூப் சேனல்களுக்கு தடை

இந்தியாவில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 16 யூ-ட்யூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில், ஜியோ நியூஸ், டான், ரஃப்தார், போல் நியூஸ், ஏஆர்ஒய் நியூஸ், சமா டிவி போன்ற முக்கிய செய்தி நிறுவனங்களின் யூடியூப் சேனல்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
*****
அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
*****
OTT தளங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹுலு, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், ALT, எக்ஸ் (X) உள்ளிட்ட தளங்களுக்கு நோட்டீஸ் அளித்தது உச்ச நீதிமன்றம்!
OTT மற்றும் சமூக ஊடகங்களில் ஆபாச படங்கள், வெப் சீரிஸ்களை ஒளிபரப்புவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவில் உச்ச நீதிமன்றம் அதிரடி.
*****
செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு முடித்து வைப்பு

“அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் கூட செந்தில் பாலாஜி அமைச்சராக கூடாது
மீண்டும் அமைச்சராகி ஜாமினை
ரத்து செய்யக் கோரும் மனுக்களை
மீண்டும் தாக்கல் செய்ய வைக்கக்கூடாது
டெல்லி முதல்வர் தலைமைச் செயலகம் செல்லக்கூடாது என உத்தரவிட்டதை போல உத்தரவிட வேண்டும்
செந்தில்பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும்” – அமலாக்கத் துறை
மீண்டும் அமைச்சராக முடியாது என உச்சநீதிமன்றம் கூற அதிகாரம் இல்லை
பதவியா, ஜாமினா என்ற கேள்விக்கு பதவி விலகி பதில் அளித்துவிட்டார் – செந்தில் பாலாஜி தரப்பு
*****
முருகேசன் – கண்ணகி கொலை: ஆயுள் தண்டனை உறுதி – உச்ச நீதிமன்றம்.

கடலூர் மாவட்டம் முருகேசன் – கண்ணகி ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு.
2003இல் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை செய்து எரிப்பு.
******
பும்ராவின் மனைவி காட்டமான பதில்!

எங்கள் மகன் அங்கத் பும்ரா ஒரு வைரல் செய்தியாக ஆக்கப்படுவதில் எங்களுக்கு துளியும் விருப்பமில்லை. ஆன்லைனில் உள்ளவர்கள் வெறும் 3 வினாடி வீடியோவை வைத்து அங்கத் யார்? அவர் எப்படிப்பட்டவர்? என தீர்மானிக்கின்றனர்.
Trauma, Depression போன்ற வார்த்தைகளை ஒன்றரை வயதான ஒரு குழந்தையின் குணாதிசயங்களுடன் ஒப்பிட்டு பேசுவதை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. எங்களின் மகனை பற்றியும், வாழ்க்கையை பற்றியும் உங்களுக்கு ஒன்றும் தெரியாது!
IPL போட்டியின்போது அங்கத் அமைதியாக இருந்தது இணையத்தில் பேசுபொருளான நிலையில் பும்ராவின் மனைவி சஞ்சனா காட்டம்.
****
விஜய் ஆண்டனி விளக்கம்

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி போட்ட பதிவு வைரலாக வலம் வரும் நிலையில் தற்போது தனது பதிவிற்கு அவர் விளக்கம் கொடுத்து புதிய பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இந்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு விளக்கம் அளித்து விஜய் ஆண்டனி கூறிருப்பதாவது :
காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம் , நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும் நம் வலிமையான கரங்களால் நம் இறையாண்மையை பாதுகாப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
*****




