இந்தியாஉலகம்

இந்தியா வரும் அமெரிக்க துணை அதிபர்: வரி விதிப்பு சர்ச்சை ஓயுமா ?

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், 2025 ஏப்ரல் 21ஆம் தேதியன்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க துணைத் அதிபர் ஜே.டி. வான்ஸும் அவரது குடும்பத்தினரும் ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24 வரை இந்தியா மற்றும் இத்தாலிக்கு பயணம் மேற்கொள்வார்கள். இந்த நிலையில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தலைவர்களுடன் பகிரப்பட்ட பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் முன்னுரிமைகள் குறித்து விவாதிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய வான்ஸின் செய்தித் தொடர்பாளர், “அமெரிக்க துணை ஜனாதிபதி இந்த வாரம் இத்தாலிக்கும், பின்னர் இந்தியாவுக்கும் பயணம் மேற்கொள்வார்” என்றார். வான்ஸின் மனைவி உஷா வான்ஸும் இந்தப் பயணத்தில் அவருடன் வருவார். இவர் அமெரிக்க நாட்டின் இரண்டாவது பெண்மணியாக இருக்கும் முதல் இந்திய-அமெரிக்கர் ஆவார். மேலும், இது வான்ஸுன் முதல் இந்திய பயணம் ஆகும்.

இந்நிலையில், துணை ஜனாதிபதி புதுடெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ராவுக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்புகளை நடத்துவார். முன்னதாக, இது தொடர்பாக இந்திய அதிகாரிகளும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், அமெரிக்காவுடனான வர்த்தக வரி பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆறு வாரங்களில் முடிக்கப்படும் என்று நம்புகிறோம் என புதுடெல்லி மூத்த அதிகாரி ஒருவர் ப்ளூம்பெர்க் நியூஸிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button